கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வரும் Dr. J. சிவகுமாரன் அவர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த இன்வெண்டரி கண்ட்ரோலர் விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ தொழிற்துறையில் பொருளிருப்புக் கட்டுப்பாட்டில் (inventory control) மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது

 

மருத்துவத்துறை சார்ந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிடும் இன்சைட்ஸ் கேர் என்ற பத்திரிகை நடத்தும் இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனம் இந்த விருதை அளித்தது. மருத்துவத் துறையில் சிறந்த முறையில் செயல்பட்டு அதன் மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றும் நபர்களை பாராட்டி கௌரவிக்கும் விதமாக இன்சைட்ஸ் கேர் இந்த விருதை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மருத்துவத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ள Dr. J. சிவகுமாரன் பல முன்னணி பத்திரிகைகளில் மருத்துவம் தொடர்பான கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வழங்கிய ஹெல்த்கேர் விஷனரி விருதையும், வேர்ல்ட் ஹெல்த் மற்றும் வெல்னஸ் காங்கிரஸ் வழங்கிய மோஸ்ட் ஐகானிக் ஹெல்த்கேர் லீடர் குளோபல் விருதையும், பார்ச்சுனா குளோபல் வழங்கிய 2024 ஆண்டின் சிறந்த தலைமை செயல் அதிகாரி விருதையும் பெற்றுள்ளார். இந்த விருது பெறும் இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே தலைமை செயல் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இந்த வருடம் ஆயுட்கால சாதனையாளர் பிரிவில் பிளக்ஸ் குளோபல் விருதையும் பெற்றுள்ளார். 

 

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி பல விருதுகள் பெற்று மருத்துவமனைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் Dr. J. சிவகுமாரன் அவர்களுக்கு தங்களது பாராட்டுதல்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். 

 

Dr. J. சிவகுமாரன் தனது நன்றியுரையில் இன்வென்டரி கண்ட்ரோல் என்பது மருத்துவ சேவை துறை நிர்வாகத்தில் ஒரு முக்கியமான செயல்பாடாகும். மருத்துவ நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு அது உதவுகிறது. தமது பணிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் கேஎம்சிஹெச் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.