ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை இலக்கியப் போட்டிகள்
- by David
- Feb 19,2023
News
கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வாக “ழகரலிஷ்” எனும் கலை இலக்கியப் போட்டிகள் மொழி துறையின் சார்பில் நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 25 போட்டிகளில் 29 கல்லூரிகளிலிருந்து 372 மாணாக்கர்கள் கலந்து கொண்டு தங்களது கலைத்திறனை வெளிப்படுத்திப் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சுவிஸ் அசோசியேட்ஸ் இயக்குநர் K.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் R.ஜெகஜீவன் தலைமை உரையாற்றினார். மொழித்துறையின் தலைவர் R.விஜயசாமுண்டீஸ்வரி துவக்க விழா உரை அளித்தார்.
25 -ம் ஆண்டு வெள்ளி விழாவின் நிறைவாக சுழற்கோப்பையினைப் கோவை பாரதியார் பல்கலைக் கழகம் பெற்றது.