கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இடத்தில் விபத்து, 3 பேர் மரணம்
- by admin
- Oct 13,2025
புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தின் கோல்ட்வின்ஸ் பகுதியில் திங்கள் நள்ளிரவு 1.30 மணியளவில் வாகன விபத்து ஏற்பட்டு அதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை அவிநாசி சாலை வழியாக புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து இறங்கும் இடத்தில் சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்புறம் மீது கார் மோதியதில் 3 பேர் பலியாகியுள்ளனர், என செய்தி வெளியாகி உள்ளது.
நள்ளிரவில் அதிவேகமாக சென்ற ஒரு கார் காட்டுபாட்டை இழந்து, மேம்பாலம் முடியும் இடமான கோல்ட்வின்ஸ் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் 1 பெண் உட்பட 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, நொறுங்கிய காரிலிருந்து உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்த விபத்து குறித்து பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.