திங்கள் முதல் 19.10.25 வரை கோவையில் வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? இதோ தகவல்
- by David
- Oct 13,2025
Coimbatore
சென்ற வாரத்தில் இறுதி நாட்களில் கோவை மாநகரின் பல இடங்களில் மழை பெய்த நிலையில், இந்த வாரம் முழுவதும் மாநகரில் மழைக்கான வாய்ப்பு நன்கு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
மாநகரில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது மதியத்துக்கு மேல் இடியுடன் கூடிய மழையாக இருக்கக்கூடும். இந்த நிலை வரும் ஞாயிறு வரை (19.10.25) இருக்கும். காலை நேரத்தில் இயல்பான வெயில் சூழலே நிலவும். அதிக வெப்பம் இருக்க வாய்ப்புகள் இல்லை.
பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஒருவேளை சூழல் மாறினால் மாநகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும், ஒரு நாள் மழை இருந்தால் மறுநாள் இருக்காமல் போகலாம்.
எப்படியிருந்தாலும் இந்த வாரம் மாநகரில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் கொள்ளவும்.
நன்றி : சுஜய் - வானிலை ஆய்வாளர் - கோவை