வரும் திங்கள், செவ்வாய் கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இங்கெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார்
- by David
- Jul 05,2025
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் ஜூலை 7ம் தேதி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்கிற முழக்கத்துடன் தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார்.
சுற்றுப்பயணத்தின் முதல் கட்டம் 7.7.2025 முதல் 21.7.2025 வரை இருக்கும். இந்த நாட்களில் அவர் கோவை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.
கோவை மாவட்ட சுற்றுப்பயன விவரம் :-
07-07-2025 காலை 9.00 மணிக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, தேக்கம்பட்டி பகுதியில் உள்ள புகழ்பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அதை தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, விவசாயிகளுடன் கலந்துறையாடுகிறார்.
மாலை 4.35 மணிக்கு, மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலை, காந்திசிலை அருகே ரோடுஷோவில் கலந்து கொண்டு பொது மக்களை சந்திக்கிறார்.
மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 5.40 மணிக்கு காரமடை பேருந்து நிறுத்தம் அருகில் பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 6.40 மணிக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 7.40 மணிக்கு துடியலூர் ரவுண்டானா அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
இரவு 9 மணிக்கு சரவணம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
08-07-2025 மாலை 4 மணிக்கு கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடவள்ளி பேருந்து நிலையத்தில் மக்களிடையே உரையாற்றுகிறார்.
மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் ரோட்ஷோவில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 6. மணிக்கு வடகோவை சிந்தாமணி அருகில் பொதுமக்களின் வரவேற்ப்பை ஏற்றுகொள்கிறார்.
மாலை 6.30 மணிக்கு கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை டவுண்ஹால் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோணியம்மன் கோவில் முன்பாக பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
மாலை 7 மணிக்கு சுங்கம் ரவுண்டானாவில் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுகொள்கிறார்.
மாலை 9 மணிக்கு புலியகுளம் பகுதியில் பொதுமக்களிடையே வாகனத்தில் நின்றபடி உரையாற்றுகிறார்.