கோவையில் இன்று (23.6.25),  இந்துத்துவ அமைப்பான ராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் - ஆர். எஸ்.எஸின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேரில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.  இதில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தலைவர்களில் ஒருவருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டது கவனம் பெற்றது. மோகன் பகவத்துக்கு வேலுமணி முருகர் சிலையையும், அவரின் சகோதரர் அன்பரசன் வேலையும் பரிசாக வழங்கினர்.