கோவை கிரைம் செய்திகள் - 2.10.25
- by admin
- Oct 02,2025
காந்தி ஜெயந்தி அன்று சட்ட விரோதமாக கோவையில் மது விற்றவர் கைது
தேச தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளன்று மதுவிற்பனை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பும் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை கோவை பேரூர் படித்துறை அருகில் சட்ட விரோத மது விற்பனை நடைபெறுவது சமூக வலைத்தளங்களில் அம்பலமானது. இதை அடுத்து அரசு உத்தரவை பின்பற்றாமல் மது விற்ற ராதாகிருஷ்ணன் என்பவரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 58 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கைதான நபர் விருதுநகரை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
தகவல் : தினமலர்
பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்பனை என குற்றச்சாட்டு!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றின் அருகே உள்ள டாஸ்மாக் ( அரசு மதுபான கடை) கடை இன்று காலை முழுவதுமே திறந்துவைக்கப்பட்டு, அதில் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்தது.
இதை கண்டு பலரும் கடந்து போனபோது, ஒருவர் தனது கைபேசி கேமராவை சட்டைப்பையில் வைத்து பதிவு செய்யும்படி வைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கே பலரும் மதுபானத்தை குடித்து நிற்பது பதிவாகி இருந்தது. அரசின் அறிவிப்பை மதிக்காமல் மதுக்கடை செயல்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது.