கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் சௌடாம்பிகை கோவிலில் கத்தி போடும் திருவிழா ஊர்வலம் இன்று அதிகாலை நடைபெற்றது. கோவை பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் ஊர்வலம் துவங்கி டவுன்ஹாலில் உள்ள சௌடாம்பிகை கோவிலில் நிறைவு பெற்றது.இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆடிக்கொண்டே கைகளை கத்தியால் லேசாக வெட்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.