விஜயதசமியை முன்னிட்டு கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
- by admin
- Oct 02,2025
Coimbatore
விஜயதசமி நாளில் ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாக்கிலும் அரிசியிலும் எழுத வைத்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது இந்து மதத்தின் மேல் பற்று கொண்ட மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இன்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி கொண்டனர். குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தாய்மொழியின் முதல் எழுத்து, குழந்தைகளின் பெயர், பிள்ளையார் சுழி, அம்மா,அப்பா என்று எழுத வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.