பாஸ்ட் டேக் - அடிப்படையில் இயங்கும் சுங்கச்சாவடி பாஸ் பற்றிய முக்கிய அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று வெளியிட்டார்.

வணிக ரீதியாக இயக்கப்படாத தனியார் கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாஸ்-கள் வரும் ஆகஸ்ட் 15 முதல் கிடைக்கும். இதன் விலை ரூ. 3000 ஆகவும்.

இந்த பாஸ் அக்டிவேட் செய்யப்பட்ட 1 வருட காலத்திற்கோ அல்லது இதை சுங்கச்சாவடிகளில் பயன்படுத்திய 200வது பயணத்திலோ இதன் செல்லுபடி காலம் முடிந்து விடும். இது தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என கருதப்படுகிறது.