கோவையில் ஜப்பான் உணவு திருவிழா! எங்கே? எப்போது?
- by David
- Aug 01,2024
Food
வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை கோவை NGP தொழில்நுட்பக் கல்லூரியில் ஜப்பான் திருவிழா நடைபெற உள்ளது.
இந்த ஒரு நாள்-நிகழ்ச்சியை ஜப்பான் உணவு திருவிழா, ஜப்பானியர்களோடு கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஜப்பானிய கலை நிகழ்ச்சி, பல்வேறு போட்டிகள், ஜப்பானில் பணிசெய்ய, தொழில் துவங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடைபெற உள்ளது.
இதை 'ஜப்பான் திருவிழா' கமிட்டியுடன் சென்னையில் செயல்படும் ஜப்பான் கவுன்சுலேட் ஜெனரல் அலுவலகம் இணைந்து நடத்துகின்றனர். இதில் மக்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம்.