உலக தரம் கொண்ட சாஃப்ட்வெர் இன்ஜினியராக உலக தரம் கொண்ட கல்வியு(ய)ம் அவசியம்
- by asdudiil
- Aug 01,2025
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவ, மாணவிகள் +2 தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் 7.5 லட்சம் பேர் தங்கள் முதல் முயற்சியில் வெற்றிகரமாக தேர்ச்சிபெற்று விடுகின்றனர்.
இவர்களில் உயர்கல்வி கற்க செல்பவர்களின் சுமார் 2.2 லட்சம் முதல் -2.5 லட்சம் பேர் பொறியியல் பயில விரும்புகின்றனர். நமது நாட்டில் ஆண்டுக்கு சுமார் 14-15 லட்சம் பொறியாளர்கள் உருவாகின்றனர் என்றால், அதில் 17% பேர் தமிழ் நாட்டில் இருந்து தான் வருகின்றனர். நாட்டிலேயே அதிகப்படியான பொறியாளர்களை உருவாக்கும் மாநிலமாக தமிழ் நாடு உள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்வி கற்க விரும்பும் மாணவர்களில் 'கணினி அறிவியல் மற்றும் பொறியியல்' (Computer Science and Engineering) கற்க விரும்புவோர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பொதுவாகவே, பொறியியல் கல்வி முடித்த மாணவர்களை பணியமர்த்த விரும்பும் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களிடம் எதிர்பார்ப்பது - துறை சார்ந்த சமகால அறிவையும், திறமையையும் தான்.
கணினி துறை என்பது தினமும் முன்னேற்றங்களை அடையும் துறை. இன்று செயற்கை நுன்னறிவு துறை (Artificial Intelligence) மொத்த கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையை மாற்றியுள்ளது எனவே இதில் உள்ள முன்னேற்றங்களை கல்லூரி கல்வி கற்கும் காலத்திலேயே சிறப்பாக கற்றுக்கொண்டால் மட்டுமே நாளை பணியமர்த்தப்படும் போது அந்த மாணவன்/மாணவி பணியை சிரமமின்றி, எந்த ஒரு சவால்களுக்கும் சரியான தீர்வை வழங்க முடியும், அவர்களின் வாழ்க்கையிலும் அவர்கள் எதிர்பார்க்கும் உயரத்தை எட்ட முடியும்.
இப்படி ஒரு எதிர்காலத்திற்கு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி கற்க விரும்பும் "குறிக்கோள்" உடைய மாணவர்களுக்கு இளநிலை பொறியியல் பாடத்திற்கான அறிவை மட்டும் வழங்காமல் பட்டறிவை (experential learning), சிறந்த பொறியியல் கல்வி மற்றும் தொழில்துறை அனுபவத்தை (industry exposure) வழங்க, கல்வித்துறை, திறன்மேம்பாட்டு பயிற்சி துறையை சேர்ந்த சிலர் மற்றும் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களை சேர்ந்த தொழில் வல்லுநர்கள் சிலர் இணைந்து உருவாக்கிய கல்வி தளம் தான் 'கல்வியம்' (Kalvium).
கல்வியம் என்றால் என்ன?
கல்வியம் என்பது இந்தியாவை சேர்ந்த பொறியியல் கல்வி வழங்கும் ஒரு தளம். இதில் இளநிலை பி. டெக். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் உடன் கூடிய 10க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் உள்ளன.
இவை அனைத்தும் இந்திய பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுமதி பெற்ற பட்டப்படிப்புகள்.அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) வழிகாட்டுதல்களை பின்பற்றி பட்டப்படிப்புகளை இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள 22 பல்கலைகழகங்களில் கூட்டமைத்து வழங்குகிறது. இந்த நிறுவனம் வழங்கும் பாடத்திட்டங்கள் அனைத்துமே சமீபத்திய முன்னேற்றங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்பது இதன் ஒரு சிறப்பு.
இந்தியாவில் உள்ள சிறந்த தொழில் நிறுவனங்கள், பன்நாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அனைவரும் இணைந்து, கல்வியம் தளத்தின் கல்வி வாரியத்தின் உறுப்பினர்களுடன் இணைந்து இந்த பாடத்திட்டங்களை உருவாக்குகின்றனர்.
வழக்கமான பொறியியல் கல்வி Vs. கல்வியம் பொறியியல் கல்வி
கல்வியம் பாடத்திட்டம் உள்ள ஒரு பல்கலைக்கழக வகுப்பறை என்பது வடிவமைப்பிலிருந்தே தனித்துவமான ஒன்றாக இருக்கும்.
அதே பல்கலைக்கழகத்தில் கல்வியம் பாடத்திட்டம் அல்லாத வகுப்பறைகளில் வழக்கம் போன்ற கரும்பலகை, ப்ரொஜெக்டர், போன்றவற்றின் மூலம் மாணவர்கள் பாடத்தை கற்பர்கள் என்றால், கல்வியம் வகுப்பறையில் உள்ள மாணவர்கள் முதல் நாளிலிருந்து புத்தகங்கள் இல்லாமல் மடிக்கணினி மூலமாகவே கல்வியை மாற்று வழிமுறையில் கற்க துவங்குவார்கள்.
வழக்கமாக புத்தகங்களில் இருக்கக்கூடிய கோட்பாடுகளை வார்த்தைகளாக கற்றுக்கொண்டு, அதை பாதி புரிந்தும் புரியாமலும் மனப்பாடம் செய்து, அதன் பின்னர் ஆய்வுக்கூடத்திற்கு போய் அங்கு அந்தக் கோட்பாட்டை செய்து பார்த்து அதையே விடைத்தாளில் எழுதி வரக்கூடிய முறை இங்கு கிடையாது.
அதற்கு பதிலாக முதல் நாளிலிருந்து மடிக்கணினியில் அந்த கோட்பாடுகள் என்ன என்பதை செய்து பார்த்து புரிந்து கொள்ளக்கூடிய அனுபவத்தை கல்வியம் வழங்குகிறது. கல்வியம் மாணவர்களுக்கென்று அந்த நிறுவனம் பிரத்தியேகமாக பயிற்சி கொடுத்து உருவாக்கிய ஆசிரியர்கள் பாடங்களை கற்றுக் கொடுப்பார்கள்.
ஆரம்பத்திலிருந்து செயல்முறை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதால், அவர்கள் தெளிவாக புரிந்து செய்து பார்த்து அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு சாப்ட்வேர் பொறியாளர் என்னென்ன டிஜிட்டல் உபகரணங்களை தனது நிறுவனத்தில் பயன்படுத்துவாரோ, அதை கல்வியம் மாணவன் வகுப்பறையிலேயே பயன்படுத்துகிறான்.
இதற்கான அனைத்து டிஜிட்டல் உபகரணங்களும் கல்வியும் மாணவனுக்கு வழங்கப்படும். இங்கே படிப்பு வேறு பயிற்சி வேறு என்ற அணுகுமுறை கிடையாது.
தனிப்பட்ட கவனம், அளவில்லா வாய்ப்புகள்
கல்வியம் வகுப்பறைகளில் மாணவர்கள் நவீன முறையில் கற்றுக்கொள்ளும் அனைத்தையும், தினமும் பயிற்சி செய்து பார்க்க இதற்கென்று அவர்களுக்கு இணையம் மூலம் இயங்கும் 'டோஜோ' எனும் பயிற்சி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் புரிந்து கொண்ட கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி செய்ய, பல்வேறு கேள்விகள் அதில் இருக்கும். அவற்றுக்கு மாணவர்கள் சரியான தீர்வுகளை வழங்க வேண்டும்.
டோஜோ-வில் மாணவர்களின் திறன் கண்டறியப்பட்டு வரும். எந்த ஒரு மாணவன் தனக்கு வழங்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை சரியாக வழங்க சிரமப்படுகிறாரோ அவருக்கு தனி கவனம் செலுத்த ஆசிரியருக்கு கல்வியம் நிபுணர்கள் அறிவுறுத்தல் வழங்குவார்கள்.
அதேசமயம் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு பாராட்டுகளும் தரவரிசையும் வழங்கப்பட்டு வரும். கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் அவர்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள மதிப்புமிக்க தொழில் நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கப்படும். இவை அனைத்துமே இணையதளம் வழியே செய்யக்கூடிய பணிகளாக இருக்கும்.
யாருக்கெல்லாம் 'கல்வியம்' முறை சாத்தியம்?
2022ல் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்வியம் நிறுவனத்தின் உடன் கூட்டமைத்த பல்கலைகழகங்களில் தற்போது 1500க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
2022ல் பஞ்சாபில் உள்ள லவ்லி ப்ரொபஷனல் யூனிவர்சிட்டியில் (LPU) இந்த நிறுவனம் கூட்டமைத்து, உயர் கல்வி வழங்க ஆரம்பித்தது. முதல் ஆண்டு அந்த பல்கலைக்கழகத்தில் கல்வியம் பாடத்திட்டத்தின் கீழ் 36 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களின் 16 பேருக்கு அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னதாகவே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அமெட் பல்கலைக்கழகம் (AMET), சென் ஜோசப் பல்கலைக்கழகம், சென்னை; வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை; எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், திருச்சி, கலசலிங்கம் பல்கலைக்கழகம்- ஸ்ரீவில்லிபுத்தூர்; தக்ஷீலா பல்கலைக்கழகம், திண்டிவனம் போன்ற பல பல்கலைக்கழகங்களுடன் கூட்டமைத்து பட்டப்படிப்புகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. கோவையில் உள்ள சில தனியார் பல்கலைக்கழகங்களுடன் கூட்டமைக்கவும் பேச்சுக்கள் நடைபெற்றுவருகிறது.
கல்வியம் உடன் இணைந்து பட்டபடிப்புகளை வழங்கும் பல்கலைகளில், வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, திங்கள் - சனிக்கிழமை வரை நடைபெறும். கற்றல் மட்டுமல்லாது மாணவர்கள் அனைவருமே, செய்முறைகளை, தேர்வுகளை வகுப்பறைகளில் டிஜிட்டல் முறையிலேயே எழுதுவார்கள்.
இதற்கான கட்டமைப்புகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டரிலும் நடைபெறும் தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் பல்கலைக்கழகத்தின் முறைக்கேற்ப சதவீதங்களாக, புள்ளிகளாக அவர்களுக்கு வழங்கப்படும்.
சினிமா காட்சிகளில் வருவது போல கல்வியம் கல்லூரி வகுப்புகள், விளையாட்டாக, வேடிக்கையானதாக இருக்காது. நான்கு ஆண்டுகள் குறிக்கோளுடன், விருப்பத்துடன், பொறியியலை நேசித்து தெளிவாக கற்றறிந்து சிறந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்ற மன உறுதியுடன் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே கல்வியம் வழங்கும் கல்வி சாத்தியம்.
இதுபற்றி மேலும் அறிந்து கொள்ள - www.kalvium.com செல்லவும். 094832 00300 அழைக்கவும்.