ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- by asdudiil
- Aug 01,2025
Coimbatore
வரும் ஞாயிறு (3.8.25) ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவையில் இன்று முதல் 3ம் தேதி வரை பொதுமக்கள் நலன் கருதி வழக்கமாக இயக்கப்படும் பேரூந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.8.25 முதல் 3.8.2025 வரை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், சேலம் பகுதிகளுக்கும், சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 85 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
ஆடிப்பெருக்கு நாளன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர், ஈஷா, பூண்டி வெள்ளிங்கிரி, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோயில் மற்றும் பொள்ளாச்சிக்கு கூடுதலாக 15 பஸ்கள் இயக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.