உபயோகமில்லாத படுக்கை, சோபா போன்ற பொருட்களை சாலைகளில் வீச திட்டமா? அதுக்கு வேற தீர்வு இருக்கு கோவை மக்களே
- by CC Web Desk
- Jul 27,2025
கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபா- க்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்ற, வருகின்ற, ஆகஸ்ட்- 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சிறப்பு சேகரிப்பு முகாமை நடத்த உள்ளது.
இந்த இரண்டு தினங்களிலும், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மேற்கண்ட பெரிய அளவிலான கழிவுப்பொருட்களை வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள சேகரிப்பு இடங்களுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கலாம். அத்துடன், மக்கள் இவ்வகை கழிவுகளை தெருவோரம், சாலைகளில் அல்லது காலி இடங்களில் விட்டுவிடாமல், இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் சேகரிப்பு மையங்களாக செயல்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் வார்டு சுகாதார மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம். கழிவுகளை முறையாக நிர்வகித்து, சுத்தமான கோயம்புத்தூரை உருவாக்கும் இம்முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட மண்டல உதவி எண்களில் தொடர்பு கொள்ளவும்: வடக்கு மண்டலம் 8925975980. மேற்கு மண்டலம் 8925975981. மத்திய மண்டலம் 8925975982. தெற்கு மண்டலம் 9043066114. கிழக்கு மண்டலம் 8925840945.
இணையதள முகவரி www.ccmc.gov.in
PC : TNIE