கோவை மாநகராட்சி 19 ஆம் வார்டுக்குட்பட்ட நல்லாம்பாளையம்- மணிக்காரம்பாளையம் இளங்கோ நகர், நேரு நகர் சந்திப்பில் மாநகராட்சி சார்பில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்ற முடிந்து அங்கு சமீபத்தில் தார் சாலைகள் போடப்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவில் (1 மணி) இப்பகுதியில் திடீரென்று சாலையில் விரிசல் விழுந்து பள்ளம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அந்த விரிசல் பெரிதாகிக் கொண்டே சென்றுள்ளது.மின்விளக்குகளும் அந்த பகுதியில் செயல்படாமல் இருப்பதால் இரவு அந்த வழியே வந்த வாகனங்கள் சில அந்த குழியில் சிக்கிக்கொண்டன.இன்று காலை கோவை மாநகராட்சியின் குப்பை வாகனம் ஒன்றும், ஓரிரு இருசக்கர வாகனங்களும் இந்த குழியில் சிக்கி உள்ளது. சாலையில் விரிசல் நேரமாக நேரமாக பெரிதாகிக் கொண்டே செல்வதால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளின் நலனுக்காகவும் அப்பகுதி மக்கள் நலனுக்காகவும் உடனே கோவை மாநகராட்சி அப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனையை உடனே தீர்த்து வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதியம் நேரத்தில் பள்ளி வாகனங்கள், குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்துவரும் பெற்றோர்கள் வாகனங்களில் வருவது அதிகரிக்கும் என்பதால் துரித நடவடிக்கை தேவை.

இந்த வார்டின் கவுன்சிலர் முன்னாள் மேயர் கல்பனா ஆனந்த குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள் : ரோஹன்