எல்.அண்டு.டி பைபாஸில் இயங்க உள்ள ஒரே சுங்கச்சாவடியில் எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம் ?
- by asdudiil
- Aug 01,2025
கோவை மாவட்டம் நீலாம்பூர் முதல் மதுக்கரை இடையேயான 28 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்.அண்டு.டி பைபாஸ் சாலையில் இயங்கும் 5 சுங்க சாவடிகளை நிரந்தரமாக மூடிவிட்டு, மதுக்கரையில் உள்ள 1 சுங்க சாவடியை மட்டும் சுங்க கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தற்போது வெளிவந்திருக்கக்கூடிய தகவலின் படி, இந்த பைபாஸ் சாலையில் இயங்கவுள்ள 1 சுங்க சாவடியின் 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் நபர்களின் வழக்கமான வாகனங்கள் (வர்த்தகத்திற்க்கு பயன்படுத்தப்படாத வாகனங்கள்) இந்த வழியே பயணிக்க ரூ.350 மாதாந்திர பாஸ் பெற்று மாதம் முழுதும் இந்த சுங்க சாவடி வழியே சென்றுகொள்ளல்லாம்.
கோவை மாவட்ட பதிவு எண் உடைய சிறிய வாகனங்களுக்கு ரூ.20 முதல் பெரிய வாகனங்களுக்கு ரூ.115 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியே சென்று 24 மணி நேரத்தில் திரும்பும் வாகனங்களுக்கு 25% தள்ளுபடியும் கிடைக்கும். மேலும் இதற்கான பாஸ் பெரும் வாகனங்களுக்கு 33% தள்ளுபடி வழங்கப்படும் எனவும், கோவை மாவட்ட பதிவு எண் உடைய தேசிய அனுமதி (நேஷனல் பர்மிட்) பெற்ற வணிக வாகனங்களுக்கு 50% தள்ளுபடி கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிற வாகனங்கள் :
கார் , ஜீப், வேண், ழகுராக மோட்டார் வாகனம் - ஒரு முறை பயணிக்க ரூ.35, சென்று திரும்ப ரூ.55. மாதாந்திர பாஸ் - ரூ.1210
மினி பஸ் மற்றும் சிறு சரக்கு வாகனங்கள் - ஒரு முறை பயணிக்க ரூ.60, சென்று திரும்ப ரூ.90, மாதாந்திர பாஸ் - ரூ.1955.
பேருந்து, லாரிகள் - ஒருமுறை பயணிக்க ரூ.125, சென்று திரும்ப ரூ.185, மாதாந்திர பாஸ் - ரூ.4095.
பெரும் வாகனங்கள்:
பெரிய சரக்கு வாகனங்கள் (3 AXLE TRUCKS, 4 AXLE, 6 AXLE, 7AXLE TRUCKS) பயணிக்க கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஜோடி சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் - ஒரு முறை பயணிக்க ரூ.135, சென்று திரும்ப ரூ.200, மாதாந்திர பாஸ் - ரூ.4470.
நான்கு முதல் 6 ஜோடி சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் - ஒரு முறை பயணிக்க ரூ.195, சென்று திரும்ப ரூ.290, மாதாந்திர பாஸ் ரூ.6425.
7 ஜோடி மற்றும் அதற்கு மேல் சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் - ஒரு முறை பயணிக்க ரூ. 235, சென்று திரும்ப ரூ.350, மாதாந்திர பாஸ் - ரூ.7820.
(இது இன்று வெளியான விவரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள தகவல். இதில் மாற்றங்கள் இருந்தால், அது இதே கட்டுரையில் பதிவிடப்படும்)