எப்போதிருந்து மீண்டும் கோவையில் மின்தடை ஏற்படும்? இதோ தகவல்
- by CC Web Desk
- Mar 26,2025
Coimbatore
இந்நாள் வரை பள்ளிகளில் முக்கிய தேர்வுகள் நடைபெற்று வந்ததால் கோவையில் மாணவர்கள் நலன் கருதி மின் தடை ஏற்படாமல் இருந்தது.
வரும் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை 10ம் வகுப்புக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளதால் ஏப்ரல் 15 வரை கோவையில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை ஏற்படாது. அதற்கு அடுத்தே மாதாந்திர மின் தடை ஏற்படும் என மின்வாரிய முதன்மை பொறியாளர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முடிவுகள் எப்போது?
10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே மாதம் 19ம் தேதி வெளிவரும். 12ம் வகுப்புக்கு மே 9ம் தேதி முடிவுகள் வெளிவரும்.