கோவை மாவட்டத்தின் 184வது கலெக்டராக பவன் குமார் க.கிரியப்பனவர் IAS இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் கடந்து வந்த பாதை:-

பவன்குமார் கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். PES பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பயின்றவர். 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணிக்கு தேர்வான இவர், முதன்முறையாக கடந்த 2017 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக (பயிற்சி) பணியாற்றினார்.

அதன் பிறகு மத்திய தொழிலாளர் நலத்துறையில் உதவி செயலாளராகவும், 2018 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட சார் ஆட்சியராகவும், 2019 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராகவும் பதவி வகித்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை கடலூரில் புறநகர் வளர்ச்சித்திட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றினார்.

பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் தலைமைச் செயலாளரின், இணை செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், பவன்குமார் கோவை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றார்.