கோவை மாநகரில் தினமும் 1100 முதல் 1200 டன் அளவிற்கு குப்பைகள் உருவாகின்றன. இவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பல வருடங்களாக கோவை மாநகரில் உருவான குப்பைகள் அங்கு ஏற்கனவே டன் கணக்கில் மலைபோல குவிந்துள்ளன. கோவை மாநகராட்சி எடுத்துள்ள முயற்சியால் 2020 முதல் 2024 வரை குப்பைக்கிடங்கு வளாகத்தில் பழைய குப்பைகள் மேலாண்மை செய்யப்பட்டு, 55 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  இன்னும் பெருமளவில் குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. 

கோவை மாநகராட்சி ஆணையர் வழிகாட்டுதலில், பசுமை அமைப்பான சிறுதுளி சார்பில் மீட்கப்பட்ட நிலப்பரப்பில் 10,000 த்துக்கும் அதிகமான மரங்கன்றுகள் 6 மாதங்கள் முன்பு நடப்பட்டது. இப்போது அவை வளர்ந்து, அந்த இடத்தை சற்று பசுமையாகி உள்ளது. 


வீடுகளில் உருவாகும் குப்பைகளை தெருக்களின் ஓரங்களில் வீசி செல்லாமல் அதை மக்கள் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து தினம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்கினால் அது கோவை மாநகரை தூய்மையாக வைக்க உதவும்.