கோவை ஒப்பணக்கார வீதி, ராஜ வீதியில் உள்ள கடைகளின் பாதுகாப்பு வசதிகளை விரைந்து ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு
- by David
- Oct 22,2025
Coimbatore
கோவை மாநகரில் மக்கள் கூட்டமும், வர்த்தகமும் அதிகம் ஏற்படும் இடங்களாக உள்ள ஒப்பணக்கார வீதி, ராஜ வீதியில் அமைந்துள்ள கடைகளின் பாதுகாப்பு வசதிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதை வேகப்படுத்த கோவை மாவட்ட தீயணைப்பு துறைக்கு கோவை கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கோவை ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள மகா ஸ்ரீ லட்சமி சில்க்ஸ் எனும் கடையின் மேற்பகுதியில் உள்ள அதன் கோடவுனில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 5:30 மணிக்கு இதுபற்றி தகவல் தீயணைப்பு துறைக்கு கொடுக்கப்பட்டது. கோவை தெற்கு, வடக்கு, கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
காலை 6:30 மணி அளவில் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட போது அந்த கட்டிடத்திற்குள் யாரும் இல்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.