இந்த வார இறுதி வரை வானிலை கோவை மாநகரில் எப்படி இருக்க வாய்ப்பு?
- by David
- Aug 26,2025
Coimbatore
கோவை மாநகரில் இந்த வார இறுதி வரை (30.8.25) வானிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
செவ்வாய் முதல் வியாழன் வரை லேசாக மேக மூட்டம் இருக்கலாம். மற்ற படி மதிய நேரங்கள் வெப்பம் நிறைந்ததாகவும், காலை மற்றும் மாலை வெப்பமில்லாத, சௌகரியமான நிலையில் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. மழை என்பது இருந்தாலும் சாரலாக இருக்கலாம். காற்று மிதமானதாக இருக்கும்.
நன்றி : சுஜய் - வானிலை ஆய்வாளர்