உக்கடம் பகுதியில் மேம்பால திட்டத்திற்காக இடிக்கப்பட்ட உக்கடம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கான பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியிருந்த நிலையில், நாளை (24.8.25) பேருந்து நிலைய கட்டுமான பணிகள் அதிகாரபூர்வமாக துவங்க உள்ளதாக தகவல் வெளிவந்துளளது.

இடிக்கப்பட்ட பேருந்து நிலையம் இருந்த இடத்தில் அதை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கவும், உக்கடம் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள காலி இடத்தில் புதிதாக மற்றொரு பேருந்து நிலையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளை கோவை வரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதை தொடர்ந்து இது குறித்த பணிகள் வேகமாக துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.21.55 கோடி மதிப்பில் இந்த பணிகள் நாளை ஆரம்பிக்கின்றன.

தகவல்கள் படி இந்த 2 பேருந்து நிலையங்களிலும் குறைந்தது 25 பேருந்துகளை நிறுத்தக்கூடிய பஸ் பே- க்கள் இடம்பெறும். இத்துடன் இரண்டிலும் வணிக வளாகம், கடைகள், புட் கோர்ட், பயணிகள் காத்திருப்பு அறை, டிக்கெட் முன்பதிவு இடம் இடம்பெறும். மேலும் 32 கார், 100 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைய உள்ளதாம். இத்துடன் 2 பேருந்து நிலையங்களை இணைக்க நடைமேம்பாலமும் வர வாய்ப்புள்ளது என தெரியவருகிறது.