டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில் நுட்பக் கல்லூரியின் 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பி.இ; பி.டெக்; எம்.இ' எம்.சி.ஏ பாடத்திட்ட மாணவர்களின் 28வது துவக்க விழா -“அகரம் 2025” இன்று (21.8.25) கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மையத்தில் நடைபெற்றது.

 

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் மற்றும் சக்தி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ம. மாணிக்கம் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். 

 

என்.ஐ.ஏ. கல்லூரி நிறுவனங்களின் செயலர் வி.எஸ். சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பி. கோவிந்தசாமி கல்லூரியின் ஆண்டு அறிக்கையை வழங்கினார். துணை முதல்வர் ஏ. செந்தில்குமார் துறைதலைவர்கள் அனைவரையும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

 

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ம. மாணிக்கம் விழா தலைமை உரை ஆற்றினார். இன்றைய வேகமாக மாறிவரும் உலகில், முக்கியமான உலக நிகழ்வுகள் குறித்த சமீபத்திய செய்திகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தனது உரையில் கூறினார்.

 

உலகளாவிய பிரச்சினைகளை சிறப்பாக புரிந்துகொள்வதற்கும், கற்றலை மேம்படுத்துவதற்கும், எதிர்கால சவால்களுக்குத் தயாராகுவதற்கும் சர்வதேச செய்திகளுடன் தொடர்ந்து இணைந்திருப்பது முக்கியம் என்று எடுத்துரைத்து தனது உரையை நிறைவு செய்தார்.

 

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக அருட்செல்வர் வித்யாசக்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது.

 

இந்த ஆண்டு மார்ச் 2025இல் நடைபெற்ற +2 வாரியத் தேர்வுகளில் 185+ கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று சிறந்த சாதனை புரிந்த 150 மாணவர்களுக்கு ஏ.வி.எஸ் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.அவர்களின் அசைக்க முடியாத முயற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி நிர்வாகம், அவர்களின் நான்கு ஆண்டு இளங்கலைப் படிப்பு முழுவதும் கல்விக் கட்டணம் மற்றும் விடுதி அல்லது பேருந்து கட்டணமாக ரூ. 2 கோடி மதிப்புள்ள 100% மெரிட் உதவித் தொகையை வழங்கப்பட்டது.

 

கல்லூரி தாளாளர் எம். ஹரிஹரசுதன் சிறப்புரை வழங்கினார். அவர் இளம் மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் ஊக்குவிப்பையும் தெரிவித்தார். NIA கல்வி நிறுவனங்களின் வளமான பாரம்பரியத்தை அவர் விவரித்து, கல்விச் சிறப்பு மற்றும் புதுமைக்கான அதன் நீண்டகால பங்களிப்புகளை எடுத்துக்காட்டினார்.

 

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை மொபிவெயில் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Mobiveil Technologies) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.

 

அவர் தனது உரையில், தொடர்பு முக்கியத்துவம், பலமொழிகளில் தேர்ச்சி, மனப்பான்மை மற்றும் ஒழுக்கம் ஆகியவையே வெற்றிக்கான அடிப்படைகள் என வலியுறுத்தினார்.

 

சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்த அறிவுறுத்தி, கல்வி வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் உலக நிகழ்வுகளை அறிந்திருப்பதும் முக்கியம் என்றும் கூறினார். நேர மேலாண்மை, நூலகங்களின் மதிப்பு, கல்லூரியின் வசதிகள் மற்றும் சிறப்பு மையங்களை பயன்படுத்துமாறு ஊக்குவித்தார்.

 

முழுமையான வளர்ச்சிக்கும் நீண்ட சாதனைகளுக்குமான நேர்மறை அணுகுமுறை மற்றும் பொறுப்பான பழக்கங்களை கற்றுக்கொள்ளுமாறு கூறி மாணவர்களை வாழ்த்தி உரையை முடித்தார்.