திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கோவைக்கு இண்டிகோ விமானத்தின் மூலம் இன்று பயணம் செய்வதற்கு முன் பதிவிட்டுள்ள ஒரு விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.

 

அந்த வீடியோவில் அவர் தான் கோவைக்கு இண்டிகோ விமான மூலம் பயணம் செய்ய உள்ளதாகவும் அவருடைய இருக்கை எமர்ஜென்சி கதவிற்கு அருகே இருந்த போதிலும் அதை தான் திறக்கப் போவது அல்ல என்று கூறியிருக்கிறார்.

 

அதற்கு விளக்கமாக சுய அறிவு உள்ளவர்கள் இந்த காரியத்தை செய்ய மாட்டார்கள் எனவும் அவ்வாறு இந்த அவசர கதவை திறந்தால் தனக்கு மட்டுமல்லாது பிற பயணிகளுக்கும் அது ஆபத்தாக அமையும் என்றும் தேவையில்லாத நேரம் விரயம் ஆகுதல் ஏற்படும் எனவும் அவர் கூறி எமர்ஜென்சி கதவு அருகே அமரும் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

அவ்வாறு அவர் கேட்டுக் கொண்டது மட்டுமல்லாமல் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இளம் அரசியல் முகங்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யாவை டேக் செய்துள்ளார் 

 

 

தேஜஸ்வி சூர்யா அண்மையில் விமானத்தில் பயணம் செய்த பொழுது எமர்ஜென்சி கதவை திறந்து சக பயணிகள் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியது, விமான பயண நேரத்தை விரயம் செய்தது  சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.