கோவை மாநகரில் இன்று (27.10.2025) சிவானந்தா காலனி, 100 அடி ரோடு, ரத்தினபுரி, ராம் நகர், கணபதி, பீளமேடு, அவிநாசி சாலை என பல இடங்களில் மழை லேசாக பெய்தது. பொதுவாகவே மாநகரில் தூரல் மழை சூழலே நிலவியது.

இந்த மழையால் கோவை மாநகரம் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்கிறது. இந்த நிலை தொடருமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது.

"இன்று முதல் நாளை (28.10.25) வரை கோவை மாநகரில் தூரல் மழை சூழல் இருக்கும். மத்திய வங்க கடலில் புயல் இருப்பதாலும், ஈரப்பதம் மேற்கு பகுதி வழியே இழுக்கப்படுவதால் மழை சூழல் உள்ளது. புதன் முதல் படிப்படியாக குறைந்து, வழக்கமான வெயில் சூழல் திரும்ப வரும். மாநகரில் கனமழைக்கு வாய்ப்புகள் இல்லை," என கணிக்கப்பட்டுள்ளது. எனவே குளிர்ந்த சூழலை இந்த 2 நாட்கள் அனுபவிக்கலாம்.

நன்றி : சுஜய் - வானிலை ஆய்வாளர், கோவை