திருப்பூரில் வட மாநிலத்தைச் சேர்ந்த  இளைஞர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்தி தாக்கியது சமூக வலைதளங்களின் மூலம் நேற்று வெளிச்சத்துக்கு வந்தது.

 

தமிழ் தொழிலாளர்களை வட மாநில தொழிலாளர்கள் தாக்குகின்றனர் என தகவல் பரவ, இது பற்றி காவல் துறை தற்போது புது விளக்கத்தை தந்துள்ளது. 

 

காவல் துறை செய்தி குறிப்பு மூலம் தெரிவித்ததாவது:

 

 

 

திருப்பூர் மாநகரம் வடக்கு மாவட்டம் வேலம்பாளையம் காவல் நிலையத்திர்க்கு உட்பட்ட திலகர் நகரில் உள்ள ரியா ஃபேஷன் என்ற கம்பெனியில் வேலை செய்யும் நபர் 14/1/2023 அன்று மாலை நேர தேநீர் இடைவேளையின் போது அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றபோது அங்கு அமர்ந்திருந்த இரண்டு நபர்கள் சிகரெட் பிடிக்கும் புகை பட்டதில் அவர்களுக்கு உள்ளாக சிறிய பிரச்சனை ஏற்பட்டு அங்கு இருந்த நபர் ரியா ஃபேஷன் நிறுவனத்தில் வேலை செய்யும் நபரை தாக்க முற்பட்டுள்ளார்.

 

 அதன் காரணமாக அந்த நபர் ரியா ஃபேஷன் கம்பெனியில் வேலை செய்யும் தனது நண்பர்களை அழைத்து வந்து இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைந்து சென்று விட்டதாகவும் எந்த தரப்பிற்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

 

இது சம்பந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இது தொழில் போட்டியோ வேலை வாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்சனை இல்லை என்றும் தற்செயலாக இரண்டு நபர் மற்றும் அவர்களது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையே என்று தெரிய வருகிறது.

 

இருப்பினும் இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

 

 14 /1/2023 அன்று நடந்து முடிந்த மேற்கண்ட நிகழ்வை 26/1 /2023 அன்று நடைபெற்றதாகவும் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் தமிழர்களை வட இந்தியர்கள் விரட்டுவதாக சமூக வலைதளங்களில் தவறாக பகிரப்பட்டு வருகிறது.

 

 இவ்வாறு அதில் குறிப்பிடபட்டுள்ளது.