ரூ.2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பொதுமக்கள் நலன் கருதி செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றும் வசதியை பெற ரிசர்வ் வங்கி வழிமுறை செய்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன.


எனவே பொதுமக்கள் தங்களிடம் 2000 நோட்டுகள் இருந்தால் அதை எவ்வித பதட்டமும் இல்லாமல் வங்கி மூலம் மாற்றிக்கொள்ளலாம். இம்மாதம் 23ம் தேதி முதல் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி துவங்கப்படும் என கூறப்படுகிறது.