2025 மார்ச் மாதத்தில் நடைபெற்ற +2ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழ் நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற முதல் 5 மாவட்டங்களில் கோவை மாவட்டம் 97.48% பெற்று 4ம் இடம் பிடித்தது.

பொதுவாக இது போன்ற பொது தேர்வு முடிவுகளில் பல சுவாரசியங்கள் இடம்பெறும். இந்த வரிசையில் கோவையை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி +2 தேர்வில் 346 மதிபெண்கள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் யோகா, இயற்கை மருத்துவம் தொடர்பான பட்டப்படிப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.