நடிகை பிரசன்னா, தனது மனைவி சினேகா மற்றும் மகனுடன் இன்று கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். திரை நட்சத்திரங்கள் 2 பேர் அங்கு வந்ததால், வழிபாடு முடித்து வெளியே வந்த அவர்கள் இருவரிடமும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புகழ்பெற்ற கோவை பட்டீஸ்வரர் கோயிலுக்கு சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.மேலும் சூர்யா, யோகி பாபு போன்ற நடிகர்களும் இந்தக் கோயிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை அறிந்து சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.