நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று வந்ததை அடுத்து, உடனே அது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. அதேபோல இன்று இரண்டாவது நாளாக மீண்டும் மிரட்டல் வந்தது.

விநாயகர் சதுர்த்தி நாளான இன்று இப்படி ஒரு மிரட்டல் வந்த உடன் பந்தய சாலை போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை அடுத்து நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தில் நீண்ட நேரம் சோதனை செய்தனர். இதன் பிறகு இந்த மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

இன்று கலெக்டர் அலுவலகம் தவிர கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பழைய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இங்கும் விசாரணை தீவிரமாக நடைபெற்றது. இன்று மாலை சுமார் 6 மணி வரை மிரட்டல் விடுத்தது போல எந்த பொருளும் இந்த இடங்களில் கண்டறியபடவில்லை.

மிரட்டல் விடுத்த நபர்/நபர்கள் யார் என்பதை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.