ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!
- by CC Web Desk
- Jan 29,2025
சரியாக இன்னும் 2 நாட்களில், அதாவது பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆட்டோ பயணக் கட்டணம் அதிகரிக்கும் என்று ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ. 25 என 2013ல், நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை நிர்ணயம் செய்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இப்போது உள்ள எரிபொருள் விலை போன்ற பல காரணங்களை கருத்தில் கொண்டு வரும் பிப்.1 முதல் பயண கட்டணத்தை உயர்த்த ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
புது கட்டண விவரம்:
முதல் 2 கி.மீ.க்கு ரூ. 50. அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.18 கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணம் செய்யவேண்டும் என்றால் பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் பயணிகளிடம் இருந்து அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவல் படி அரசு தரப்பில் இந்த புதிய கட்டணத்தை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.