கோவைக்கான கட்டமைப்புகள் பற்றி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்
- by asdudiil
- May 24,2025
Coimbatore
10 வது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச முதலமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்த கூட்டத்தில் நான் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம், கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் கோவைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேசியுள்ளேன், என தெரிவித்தார்.