கோவை மாநகரில் ரூ.28.5 கோடி மதிப்பில் 3 இடங்களில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க நிறைவேறியது தீர்மானம்!
- by admin
- Aug 30,2025
கோவை மாநகரில் உள்ள கிராஸ் கட் சாலை, ராஜ வீதி மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வாகனங்கள் நிறுத்துமிட வசதிகளை மேம்படுத்தவும் முடிவு செய்து, மாநகராட்சி தரப்பில் அந்த 3 இடங்களிலும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணிகளை துவங்க மாநகராட்சி தரப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிராஸ் கட் சாலையில், ஏற்கனவே அமைந்துள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிட வளாகத்தை தரமுயர்த்தி, அங்கு 95 இரு சக்கர வாகனங்கள், 84 கார்கள் நிறுத்தக்கூடிய வசதியை ரூ.9.5 கோடியில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜவீதியில் ரூ.9.5 கோடி மதிப்பில் 50 இரண்டு சக்கர வாகனங்கள், 100 கார்கள் நிறுத்தக்கூடிய பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தையும், ரேஸ் கோர்ஸ் பகுதியில் கே.ஜி.தியேட்டர் எதிரே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.9.5 கோடி மதிப்பில் 95 இரு சக்கர வாகனங்கள், 84 கார்கள் நிறுத்தக்கூடிய பல்லடுக்கு வாகன நிறுத்துமிடத்தை ஏற்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த பல்லடுக்கு வாகன நிறுத்துமிடங்களை வடிவமைத்து, கட்டுமான செய்து, இயக்கி பராமரிப்பு செய்யும் வகையில் அதற்கான முன்மொழிவு தயாராக உள்ளது. இது தயாரான பின்னர் அதை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்பட்டு பணிகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.