கோவையில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் நாளை (30.08.2025) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

குனியமுத்தூர் துணை மின் நிலையம் : குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர்.

ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம்: மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.