ஶ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- by admin
- Sep 04,2025
நாளை 5.9.25 ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடபட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை நடத்தும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார்; தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார்; ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் ராஜகோபால்; மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ் அழகப்பன்; மருத்துவமனையின் தலைமை செவிலியர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஶ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கலலூரி முதல்வர் கிரிஜா குமாரி தலைமை வகிக்க ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.
மாணவ மாணவிகள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.
அப்போது மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்த மாணவர் செண்டை மேளம் முழங்க அழைத்து வரப்பட்டார்.
மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் போட்டிருந்த அழகிய பூ கோலத்தை பார்த்தது மகிழ்ந்ததுடன், மாணவிகள் திருவதிரைக்களி நடனம், கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தன.
மகாபலி மன்னரை போல் வெடமிட்டருந்த மாணவருடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்தன. அதை தொடர்ந்து அனைவரும் கேரள பாரம்பரியமிக்க அடை பாயாசம் வழங்கி ஒருவருக்கு ஒருவர் நங்களது மகிழ்ச்சியைப் பரிமாறி கொண்டனர். இதனால் ஶ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி வளாகம் விழா கோலத்தில் காட்சியளித்தது.