ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா மற்றும் ஓணம் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவை கல்லூரி முதல்வர் ஏ. சௌந்தர்ராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவின் ஒரு பகுதியாக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் புக்களம் (பூக்கள் அலங்காரம்) உருவாக்கி ஓணம் பண்டிகை வரவேற்றனர். மேலும், கல்லூரியின் பைன் ஆர்ட்ஸ் கிளப் சார்பாக புலிகலி (புலி நடனம்), மற்றும் கும்மாட்டிகலி (முகமூடி நடனம்) மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ச்சியாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது பல்வேறு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் பரிசுகளை வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை ஸ்டாப் கிளப் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் பைன் ஆர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் ராபின் ஜானி மற்றும் தமிழ் மன்றத்தின் சார்பாக பேராசிரியர் பாண்டீஸ்வரி மற்றும் கல்லூரியின் ஸ்டுடென்ட் ஆப்யர் செல் டீன் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.