கோவையில் நாளை 3.9.25 இங்கெல்லாம் மின் தடை ஏற்படும்
- by David
- Sep 02,2025
Coimbatore
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை கோவையில் உள்ள 1 துணை மின் நிலையத்தில் மின் விநியோக பணிகள் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு தொடர்பான பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி கீழ்கண்ட இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் இடங்கள்
நீலாம்பூர் துணை மின் நிலையம் : நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன்.