டிசம்பர் 1ல் கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை (30.11.24) மாலை முதல் செவ்வாய்க்கிழமை வரை கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் 'கோவை வெதர் மேன்' சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கோவை மாநகரில் எப்படிப்பட்ட வானிலைக்கு வாய்ப்பு இருக்கும் என்பது பற்றி வானிலை ஆய்வாளர் சுஜயிடம் கேட்டபோது அவர், கோவை மாநகரில் 30ம் தேதி முதல் 1ஆம் தேதி வரை வானிலை கோவை மாநகரில் மதிய நேரம் முதல் இரவு வரை மேகமூட்டத்துடன் இருக்கும் என்றார்.
இந்நாட்களில் கோவை மாநகருக்குள் மழை என்பது மாறுபட்ட அளவில் பெய்து கொண்டிருக்கும். 1ம் தேதி மாநகரில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட அளவை பொறுத்தவரை, டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை உச்சத்தில் இருக்கும் என சுஜய் தெரிவித்துள்ளார்.
(இது 28.11.24 அன்று இருந்த சூழலை வைத்து கணிக்கப்பட்ட தகவல். மாற்றங்கள் இருந்தால் அது பகிரப்படும்)
படம்: @RadCoimbatore
கோவை மாநகரில் அடுத்த சில நாட்கள் வானிலை எப்படி இருக்க வாய்ப்பு? இதோ தகவல்!
- by David
- Nov 29,2024