கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுவரை 3 முறை கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டு, அவை வதந்தி என சோதனையின் இறுதியில் தெரியவந்தது.

இது பற்றி சைபர் கிரைம் போலீசாரிடம் கலெக்டரின் உதவியாளர் புகார் தெரிவித்துளார். இந்த புகாரின் மேல் சைபர் குற்ற பிரிவு போலீசார் விசாரணையை துவங்கி உள்ள நிலையில் இப்போது மீண்டும் ஒரு மிரட்டல் வந்துள்ளது.