மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது. அவரை வரவேற்கும் விதமாக கேரளா மண்ணை சேர்ந்தோர் 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.

கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டிலும் கேரளா மக்கள் வசிக்கும் பகுதிகளில், குறிப்பாக சென்னை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில், ஓணம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இன்று ஓணம் பண்டிகை கோவையின் பல்வேறு பகுதிகளில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தரிசனம் செய்தனர்.