மிக்ஜாம் மீட்பு பணி: சென்னை விரைந்தார் கோவை மாநகராட்சி ஆணையர்!
- by David
- Dec 06,2023
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணத்தால் ஏற்பட்ட கடும் மழையால் கிட்டத்தட்ட அங்கு அனைத்து இடங்களிலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனால் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே அங்கு மீட்பு பணிகள் செய்ய கூடுதல் உதவி தேவை என்பதால் கோவை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக 400 மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளனர். நேற்று மழைநீரை வெளியேற்றும் அதிநவீன மோட்டார்கள் கோவையிலிருந்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் அவர்களின் உத்தரவின்படி அனுப்பி வைக்க பட்டது.
நேற்று சென்னை வந்த கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்து மீட்பு பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். கோவை மாநகராட்சி பணியாளர்கள் களத்தில் இறங்கி பணி செய்ய துவங்கினர்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபா கரன், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டல துணை கமிஷனராக இரண்டு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் மழைநீர் வடிகால், வெள்ளம் தடுப்பு பணிகளில் இவருக்கு அனுபவம் உள்ளதால், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் விதமாக நேற்று மதியம் சென்னை விரைந்தார்.