கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை ஒன்று இந்த மலை பகுதி வழியே அமைந்துள்ள மடத்தூர் இராமநாதபுரம் பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புகுந்தது. 

உணவு தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை, அங்கிருந்த ரேஷன் கடையை சேதப்படுத்தி அதற்குள் இருந்த அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது. அதை தொடர்ந்து அருகில் இருந்த வாழை தோட்டத்துக்கு உணவு தேடி சென்று உள்ளது. இதனால் தோட்டம் சேதமானதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்காமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதிமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.