2024-2025 கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரிகள், பாலிடெக்னிக், ITI போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி கற்க சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் தங்கள் உயர்கல்விக்கான கல்வி கட்டணத் தொகையினை கல்வி கடனாக பெறுவதற்கு 'கல்விக் கடன் மேளா' நடைபெறவுள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் அறிவித்துள்ளார்.

இந்த கல்வி கடன் மேளா வருகிற 2.8.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள :- பான் கார்ட், ஆதார் அட்டை; 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்; மாற்று சான்றிதழ்; கல்லூரி கட்டண ரசீது; கல்லூரி சேர்க்கை கட்டண ரசீது; 2 பாஸ்போர்ட் சைஸ் படம்; ரேஷன் கார்டு ஜெராக்ஸ்; வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நகல்; உறுதி மொழி சான்று (bonafide certificate) கொண்டு வர வேண்டும்.

இளங்கலை குதித்து முதுகலை பட்டப்படிப்பில் சேருவோர்:- இளங்கலை பட்ட சான்றிதழ்; இளங்கலை மதிப்பெண் சான்றிதழ்; முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்ததற்கான ஆவணங்கள்; கல்லூரி அடையாள அட்டை. ஆகிய ஆவணங்களை கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.