கட்டுமான பணிகளுக்கு சிமெண்ட் போன்ற அவசியமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (Builders Association of India) அமைப்பின் தலைவர் நரசிம்ம ரெட்டி நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

 

 

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-

 

கட்டுமான பணிகளுக்கு சிமெண்ட் , இரும்பு கம்பிகள் மிக முக்கியமானது. இதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 

 

இதற்கு நியாயமான விலை கிடைக்க சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் விற்பனைக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில், தேசிய அளவில் பல்வேறு திட்ட பணிகள் முடிவுற்ற நிலையிலும் நிதி முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது.

 

அதன்படி மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் முடிவுற்ற பணிகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள் அடுத்த பணிகளை மேற்கொள்ள முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

 

Source : Dinakaran