இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விபரங்களின் படி தமிழகத்தின் கடந்த 30 ஆண்டு கோடை மழையின் சராசரி 83.5 மி.மீ. ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தின் 30 ஆண்டுகளாக சராசரியை ஆய்வு செய்யும் போது இந்த ஆண்டில் பெய்த கோடை மழை 109 % கூடுதலாக பெய்துள்ளது.



குறிப்பாக கோவையில் 197 % கூடுதலாக கோடை மழை பதிவாகியுள்ளதாக வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 20 நாட்களுக்கு கோடை மழை இருக்கும் என்பதால் மழை பதிவு அதிகமாக வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.