இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.

 

இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு வரும் ஜூன் 5ம் தேதி குடியரசு தலைவர் முர்மு சென்னை வந்து கிண்டியில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். 

 

கூடியரசு தலைவர் தமிழகம் வருவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் கோவை ஈஷா யோகா மையத்திர்க்கும் வந்தார்.