கோவை மாநகரின் அவிநாசி சாலையில் 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள ஜிடி நாயுடு பாலத்தில் (செலஃபி) தற்படம் எடுப்பது அங்கங்கே காணக்கூடிய செயலாக இருந்துவந்தது. 

இந்த பாலத்தின் ஏறுதளங்கள் அமைந்துள்ள இடங்களில் பாதுகாப்புக்காக ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி பாதுகாப்புக்காக தடுப்பு அமைக்கப்பட்ட இடத்தில் சமீபத்தில் இளைஞர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் தடுப்பை தாண்டி 'பாதுகாப்பாக' உரையாடுவதை காணமுடிந்தது.

விரைவில் இந்த பாலத்தின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படவுள்ளது. அவ்வாறு நடைபெற்றால் இதுபோன்ற சேட்டைகள் குறைவதுடன், அதில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக காவல் துறையினரிடம் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.