இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள  'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்திற்கு கடும்  எதிர்ப்புகள் உள்ள நிலையில் இன்று இத்திரைப்படம் தமிழகம் உள்பட பல இடங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

எனவே திரையரங்குகளை ஏதேனும் அமைப்புகள் முற்றுகையிட கூடும் என்பதால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக இத்திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி கோவையில் இத்திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


கோவையில் உள்ள மால்களில் இத்திரைப்படம் திரையிட திரையிடப்பட  உள்ள நிலையில் அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் திரையரங்குகளை சுற்றிலும் போலிசார் தொடர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே இத்திரைப்படத்திற்கான எதிர்ப்புகள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.