தொடர்ந்து மூன்றாவது நாளாக ரூ.75000க்கு மேல் செல்லும் தங்கம் விலை
- by David
- Aug 29,2025
Business
தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
இன்று (29.8.25) 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ. 9,470 ஆகவும் அதன் 1 பவுன் (8 கிராம்) ரூ.75,760 ஆகவும் உள்ளது. நேற்றை விட இன்று பவுன் விலை ரூ.520 உயர்ந்துள்ளது.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 27ம் தேதி 22 காரட் தங்கம் 1 பவுனின் விலை ரூ.75000தை கடந்து ரூ.75,120 ஆக இருந்தது.அதற்கு மறுநாள் ரூ, 75,240 ஆக இருந்தது. இன்று ரூ.75,760 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 18 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7,830 ஆகவும் அதன் 1 பவுன் ரூ. 62,640 ஆகவும் உள்ளது. சுத்தத்தங்கம் என்றழைக்கப்படும் 24 காரட் தங்கம் 1 கிராம் ரூ.10,331. அதன் 1 பவுன் ரூ.82,648.
(இது ஜி.எஸ்.டி. மற்றும் பிற வரிகள்/கட்டணங்கள் சேர்க்கப்படாத விலை)