அப்துல் கலாமின் 10வது நினைவு நாளை முன்னிட்டு கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா
- by asdudiil
- Jul 28,2025
மேவரிக் அப்துல் கலாம் இளந்தலைவர்கள் சங்கம், கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் 10வது நினைவு நாளை அனுசரித்தனர்.
இந்த முக்கியமான நாளில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்க நிறுவனர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் சரவணன் கலந்து கொண்டார். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அதை தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கே.பி. ஆர் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவ, மாணவிகள்; என்.எஸ்.எஸ் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில், பண்பாட்டுக் கலைஞர் அரவிந்த் தலைமையிலான குழு சார்பில் நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் வினாடி வினா, கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கச் செயலாளர் மணிமேகலை, நிர்வாகிகள் நிர்மல் குமார், மௌலியா, பிரசன்னா தேவி, வைரமுத்து, விக்னேஷ், அசோக், பிரகாஷ், ஜவகர் ஜானி, அஜித், சிவசக்தி குமார், அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.